கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
யோனெக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய சப் ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டியின் வெற்றியாளர்களை மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கௌரவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2024 5:26PM by PIB Chennai
அசாம் மாநிலம் திப்ருகரில் 2024 அக்டோபர் 25 முதல் 30 வரை நடைபெற்ற யோனெக்ஸ் சன்ரைஸ் அகில இந்திய சப் ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டியின் வெற்றியாளர்களை மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கௌரவித்தார். திப்ருகர் மாவட்ட விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து திறமையான இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் அசாம் வீரர்கள் பாராட்டத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தினர்.
திப்ருகரில் உள்ள தமது இல்லத்தில், திரு சோனோவால், வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை அமைச்சர் பாராட்டினார். வீரர்களின் பெற்றோர், பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்றனர். வீரர்களின் சாதனைகள் குறித்து அவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இந்த இளம் விளையாட்டு வீரர்கள் எதிர்காலத்தில் புதிய உற்சாகத்துடனும் மேம்பட்ட செயல்திறன் மூலமும், விளையாட்டில் அசாம் மாநிலத்தின் நற்பெயரை தொடர்ந்து உயர்த்துவார்கள் என்று அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் நம்பிக்கை தெரிவித்தார்.
*****
PLM/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2070340)
வருகையாளர் எண்ணிக்கை : 75