நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோல் இந்தியா நிறுவனம் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது

Posted On: 02 NOV 2024 12:55PM by PIB Chennai

 

 இந்தியாவின் நிலக்கரி தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யவும், எரிசக்தித் துறையை வலுப்படுத்தவும், அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் சிஐஎல் நவம்பர் 1, 2024 அன்று அதன் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. சிஐஎல் 1975 நவம்பர் 1 அன்று தேசிய மயமாக்கப்பட்ட கோக்கிங் நிலக்கரி (1971) மற்றும் கோக்கிங் அல்லாத சுரங்கங்கள் (1973) ஆகியவற்றின் தலைமை ஹோல்டிங் நிறுவனமாக நிறுவப்பட்டது.

சிஐஎல் உருவாக்கப்பட்ட 1975-76 ஆம் ஆண்டில் 89 மில்லியன் டன் உற்பத்தியிலிருந்து, நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா நிலக்கரி நிறுவனம் 2024 நிதியாண்டில் 773.6 மில்லியன் டன் உற்பத்தி செய்ததுஇது 8.7 மடங்கு வளர்ச்சியாகும்கோல் இந்தியா நிறுவனம் தனது மொத்த விநியோகத்தில் 80% நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு மிகவும் போட்டி விலையில் திருப்பி விடப்படுவதால், மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரம் கிடைப்பதில் கோல் இந்தியா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் 6.75 லட்சம் ஊழியர்களாக இருந்த கோல் இந்தியா நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்து தற்போது 2.25 லட்சமாக உள்ளது.

கோல் இந்தியா நிறுவனத்தை வாழ்த்திய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, "கோல் இந்தியா அதன் பொன்விழா ஆண்டில் பல மைல்கற்களுடன் நுழையும் போது, நிறுவனத்திற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் நிலக்கரி இன்னும் அதன் முழு திறனை எட்டவில்லை. விலையுயர்ந்த இறக்குமதியைத் தவிர்க்க உள்நாட்டு உற்பத்தி முக்கியம். மக்கள் சார்ந்த சமூகப் பொறுப்பு, நலன் மற்றும் பாதுகாப்புக்கு சமமான முக்கியத்துவத்துடன் கோல் இந்தியா எதிர்காலத்தில் உற்பத்தியை உயர் மட்டத்திற்கு அதிகரிக்க வேண்டும்’’ என அவர் கூறினார்.

சி..எல் நிறுவனத்திற்கு இது கிட்டத்தட்ட ஐந்து தசாப்த கால பயணமாக இருந்தது. நிறுவனம் பல மாற்றங்கள் மற்றும் சவால்கள், சோதனைகள் மற்றும் இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டது, ஆனால் அதிலிருந்து எதிர்பார்த்ததை வழங்க முடிந்தது. முற்றிலும் நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்த கோல் இந்தியா நிறுவனம், தற்போது சூரிய மின்சக்தி, சுரங்க மின் நிலையங்கள், நிலக்கரி வாயுமயமாக்கல் மற்றும் முக்கிய கனிமங்கள் ஆகியவற்றில் தேசிய நலன் கருதி பன்முகப்படுத்தி வருகிறது.

2007 ஆம் ஆண்டு தொடங்கி, சிஐஎல் அதன் நிறுவன நாள் கொண்டாட்டத்தை ஒரு உள் நிகழ்வாக முறையாக அனுசரித்து வந்தது. இதில் முன்னாள் தலைவர் அல்லது தொழில்துறை வல்லுநர் ஒருவரின் ஜே.பி.குமாரமங்கலம் நினைவு சொற்பொழிவு மற்றும் சிறந்த ஊழியகர்களுக்கு விருது வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்த ஆண்டும் நவம்பர் 3ந்தேதி கொல்கத்தாவில் நிலக்கரித் துறை  அமைச்சர் தலைமை விருந்தினராகவும், நிலக்கரித்துறை செயலாளர் கௌரவ விருந்தினராகவும்  கலந்து கொண்டு இந்த நிகழ்வைக் கொண்டாட உள்ளனர்.

*****

PKV/KV

 

 

 

 




(Release ID: 2070313) Visitor Counter : 22