சுரங்கங்கள் அமைச்சகம்
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் உற்பத்தியில் திடமான வளர்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2024 11:32AM by PIB Chennai
2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் தொடர்ந்து திடமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 128 எம்எம்டி-யிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 135 எம்எம்டியாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான 5.5% வளர்ச்சியைக் காட்டுகிறது.
இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இந்தியா 2-வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளதுடன், இந்த வளர்ச்சிப் போக்குகள் ஆற்றல், உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பயனர் துறைகளில் தொடர்ச்சியான வலுவான பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069999
***
TS/LKS/RS/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2070070)
வருகையாளர் எண்ணிக்கை : 79