பாதுகாப்பு அமைச்சகம்
'கருட சக்தி' என்ற கூட்டுப் பயிற்சிக்காக இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு இந்தோனேசியாவுக்கு புறப்பட்டது
Posted On:
01 NOV 2024 10:47AM by PIB Chennai
இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 9-வது பதிப்பான கருட சக்தி 2024-ல் பங்கேற்பதற்காக 25 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படைப் பிரிவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சிஜன்டுங்கிற்குப் புறப்பட்டது. இந்த பயிற்சி 2024 நவம்பர் 1 முதல் 12 வரை நடைபெறும்.
இந்திய படைப்பிரிவை பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்) வீரர்கள் இந்தியப் படையிலும் சிறப்புப் படை கோபாசஸ் சார்பில் 40 வீரர்கள் இந்தோனேசியா படையிலும் இடம் பெற்றுள்ளனர்.
இருதரப்பினரும் அவரவர் செயல்படுத்தும் நடைமுறைகளை அறிந்து கொள்வது, பரஸ்பர புரிதலை மேம்படுத்துவது, ஒத்துழைப்பு மற்றும் இரு ராணுவங்களின் சிறப்புப் படைகளுக்கு இடையே இயங்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதே கருட சக்தி 2024 பயிற்சியின் நோக்கமாகும். இந்தப் பயிற்சி இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், விவாதங்களை நடத்துவது மற்றும் ராணுவ பயிற்சிகளின் ஒத்திகை மூலம் இரு படைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
சிறப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல், சிறப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான நோக்குநிலை, ஆயுதங்கள், உபகரணங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை இந்தப் பயிற்சியில் அடங்கும். இந்தக் கூட்டுப் பயிற்சியான கருட சக்தி 2024, காட்டுப் பகுதிகளில் சிறப்புப் படை நடவடிக்கைகள், பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இரு நாடுகளின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் பற்றிய நுண்ணறிவைப் பெறுவது ஆகியவற்றை செயல்படுத்தும்.
இந்தப் பயிற்சி இரு தரப்பினருக்கும் தங்களின் பிணைப்பை வலுப்படுத்தவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும். பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களை அடைவதற்கும், இரு நட்பு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும் இது ஒரு தளமாக செயல்படும்.
***************
TS/PKV/RR/KV
(Release ID: 2070011)
Visitor Counter : 64