குடியரசுத் தலைவர் செயலகம்
இந்திய வர்த்தகப் பணி, இந்திய செலவுக் கணக்குப்பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்
Posted On:
29 OCT 2024 6:32PM by PIB Chennai
இந்திய வர்த்தக சேவை மற்றும் இந்திய செலவு கணக்கு சேவை பயிற்சி அதிகாரிகள் இன்று (அக்டோபர் 29, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய குடியரசுத் தலைவர், 2023-24-ம் ஆண்டில் 8.2 சதவீத விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், இந்தியப் பொருளாதாரம் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் மீள்திறனை நிரூபித்துள்ளது என்றார். தனிநபர் வருமான அளவை அதிகரிக்கவும், இக்கட்டான உலகளாவிய சூழலுக்கு இடையேயும் தொடர்ந்து உயர் மட்ட வளர்ச்சியைப் பெறவும் இந்தியா தனியார் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகள் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் நிலையில், எல்லைகளைக் கடந்து வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான சாதகமான சூழல் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவது இந்திய வர்த்தக சேவை அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் இந்திய வர்த்தக சேவை அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வருவாயின் வெளிப்படையான மதிப்பீட்டை உறுதி செய்யும் அதே வேளையில், அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செலவினங்களை சீரமைப்பதில் இந்திய செலவு கணக்கு சேவை அதிகாரிகள் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கின்றனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சிக்கலான நிதி மற்றும் செலவு மேலாண்மை சிக்கல்களைக் எதிர்கொள்வதற்கான திறமையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2069337)
Visitor Counter : 36