பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு நிறைவு மூத்த அதிகாரிகளிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் உரை
Posted On:
29 OCT 2024 4:12PM by PIB Chennai
ராணுவ உயர் அதிகாரிகளின் மாநாடு தில்லியில் நேற்றும் இன்றும் (2024 அக்டோபர் 28, 29) நடைபெற்றது. இதில் எல்லை பாதுகாப்பு, உள்நாட்டை பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
'வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழலில் இந்திய ஆயுதப் படைகள்' என்ற கருப்பொருளில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் உரையாற்றினார். இந்தியாவை பாதிக்கும் சிக்கலான உலகளாவிய, புவிசார் அரசியல் சூழல்களை டாக்டர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். தற்போதைய உலக முரண்பாடுகளையும் சவால்களையும் எதிர்கொள்ள தேவையான தயார்நிலையையும் அவர் விவரித்தார். இந்திய ராணுவம் தயார் நிலையில் சிறந்த கண்காணிப்புடன் இருப்பதற்கு பாராட்டுத் தெரிவித்த அவர், வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப தலைமை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பேசுகையில் முப்படைகளின் மேம்பட்ட ஒருங்கிணைப்பு எதிர்கால போர் நடவடிக்கைகளுக்கு முக்கியமானது என்றார்.
மாநாட்டின் போது, ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பங்களுக்கான நலத் திட்ட நடவடிக்கைகள், நிதிப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
-----
TS/PLM/KPG/DL
(Release ID: 2069307)
Visitor Counter : 22