பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு புதுதில்லி, அக்டோபர் 28, 2024
Posted On:
28 OCT 2024 4:49PM by PIB Chennai
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் இன்று (28.10.2024) காலை 11 மணிக்கு புதுதில்லி, சதர்கதா பவனில் தொடங்கியது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உறுதிமொழி ஏற்று வைக்கப்பட்டு தேசத்தின் செழிப்புக்கான ஒருமைப்பாட்டின் கலாச்சாரம் என்ற கருப்பொருளுடன் இந்த வாரம் தொடங்கியது.
இது 2024 அக்டோபர் 28 முதல் 2024 நவம்பர் 3 வரை அனுசரிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை ஆணையம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு, விழிப்புணர்வு விழிப்புணர்வு வாரத்துடன் தொடர்புடைய இயக்கம் ஆகஸ்ட் 16 முதல் நவம்பர் 15 வரை மேற்கொள்ளப்படுகிறது.
2024 நவம்பர் 8 அன்று விஞ்ஞான் பவனில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஆணையம் ஒரு விழாவையும் நடத்துகிறது. இதில் குடியரசுத்தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
------
AD/PLM/KPG/DL
(Release ID: 2068978)