எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எஃகு ஆணைய நிறுவனம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2024-ஐ கடைபிடிக்கிறது

Posted On: 28 OCT 2024 5:00PM by PIB Chennai

இந்திய எஃகு ஆணைய நிறுவனம் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக 2024 அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை  ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிறுவனத்தின் தலைவர் திரு அமரேந்து பிரகாஷ், வர்த்தக இயக்குநர் வி.எஸ்.சக்ரவர்த்தி, நிதித்துறை இயக்குநர் ஏ.கே.துல்சியானி, பணியாளர் இயக்குநர் (பணியாளர்), இயக்குநர் (தொழில்நுட்பம், திட்டங்கள் மற்றும் மூலப்பொருட்கள்) இயக்குநர் திரு.ஏ.கே.சிங், தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ்.என்.குப்தா ஆகியோர் பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, நிறுவனத்தின் தலைவர் திரு அமரேந்து பிரகாஷ் நேர்மை உறுதிமொழியை எடுக்க செய்தார்.

இந்த நடவடிக்கைகளில் வாக்கியங்கள் எழுதுதல், வினாடி வினா, ஓவியப் போட்டிகள் மற்றும் உரையாடல் அமர்வுகள் ஆகியவை அடங்கும். ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்கள். ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்க காலத்தில் (2024, ஆகஸ்ட் 15 முதல் நவம்பர் 15 வரை), கிராம சபைகள், விற்பனையாளர் சந்திப்புகள் போன்ற பல்வேறு மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

***

TS/IR/AG/DL


(Release ID: 2068968) Visitor Counter : 36


Read this release in: Urdu , English , Hindi , Punjabi