கலாசாரத்துறை அமைச்சகம்
ராய்காட் கோட்டை சத்ரபதி சிவாஜியால் புதுப்பிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற கோட்டையாகும்
Posted On:
28 OCT 2024 1:45PM by PIB Chennai
ராய்காட் கோட்டை இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்புகள் என்ற தலைப்பின் கீழ் யுனெஸ்கோ உலக பாரம்பரியத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 12 கோட்டைகளில் ஒன்றாகும்.
ராய்காட், மராட்டிய கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதுடன் ஒரு மலையில் உள்ள கோட்டை நகரமாகவும் திகழ்கிறது .இந்த ஆண்டு குஜராத்தின் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த அணிவகுப்பின் பின்னணியில், ராய்காட் கோட்டை உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் பள்ளத்தாக்குகளுக்கு மேலே உயர்ந்து நிற்கும் ராய்காட் கோட்டை சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துச் சொல்கிறது. ஒரு காலத்தில் செழிப்பான மராட்டிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக இந்த மலை உச்சி கோட்டை இருந்தது.
பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட ராய்காட், அண்டை மலைகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மலைத்தொகுதியாக நிற்கிறது. செங்குத்தான பாறைகள்,1500 அடி எஸ்கார்ப்மென்ட் போன்ற புவியியல் அம்சங்களால் அது அசைக்க முடியாத தன்மைகளுடன் திகழ்கிறது.
இங்குதான் பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1674) சிவாஜி மகாராஜ் தனது தலைநகரை நிறுவினார். சிவாஜி மகாராஜ் கிபி 1680-ல் இறக்கும் வரை ராய்காட் கோட்டையிலிருந்து ஆறு ஆண்டுகள் ஹிந்த்வி ஸ்வராஜ் ஆட்சி செய்தார். ராய்காட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சமாதி உள்ளது.
----
TS/PLM/KPG/KR/DL
(Release ID: 2068915)
Visitor Counter : 19