குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்பதற்கு வெளிநாட்டு மொழி தடையாக இருக்கக் கூடாது - குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 26 OCT 2024 7:54PM by PIB Chennai

அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கற்பதற்கு வெளிநாட்டு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். 

ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

பொறியியலில் சிறந்து விளங்கும் ஏராளமான நாடுகள் உள்ளன என்று கூறிய அவர், ஆனால் அந்த நாடுகள் பாடங்களை வெளிநாட்டு மொழியில் கற்பிக்கவில்லை என்றார். ஜப்பான், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளதாகவும் ஆனால் அவை வெளிநாட்டு மொழிகளை அதிகம் பயன்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற கூட்டு நடவடிக்கை எடுக்க தேவை என்று அவர் வலியுறுத்தினார். நமது தனிநபர் வருமானத்தை எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னோடி பங்கை எடுத்துரைத்த அவர், தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒரு முன்மாதிரியை நாடு அமைத்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். ஒவ்வொரு நாளும் சராசரியாக 466 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கின்றன என்று அவர் கூறினார்.

 உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியாவின் விரைவான வளர்ச்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். விண்வெளி, நீலப் பொருளாதாரங்களில் இந்தியாவின் பங்கு குறித்தும் குடியரசுத் துணைத் தலைவர் பேசினார். இந்தியா இப்போது மங்கள்யான், ககன்யான், ஆதித்யா போன்றவற்றின் மூலம் விண்வெளி சாதனைகளைப் படைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 2030-ம் ஆண்டுக்குள் நமது விண்வெளிப் பொருளாதாரம் 4 மடங்கு உயரும் என்று அவர் குறிப்பிட்டார். 

மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியா பவுண்டேஷனின் தலைவர் டாக்டர் ராம் மாதவ், ஜோத்பூர் ஐஐடி நிர்வாகக் குழுத் தலைவர் திரு ஏ.எஸ்.கிரண் குமார், ஜோத்பூர் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் அவினாஷ் குமார் அகர்வால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

**************

PLM/KV


(Release ID: 2068636) Visitor Counter : 22