தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 ஆகஸ்ட் மாதத்தில்  20.74 லட்சம் புதிய தொழிலாளர்கள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தில் சேர்ந்துள்ளனர்

Posted On: 26 OCT 2024 2:56PM by PIB Chennai

 

 2024 ஆகஸ்ட் மாதத்தில் 20.74 லட்சம் புதிய தொழிலாளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் (இஎஸ்ஐசி) தற்காலிக ஊதியத் தரவு பட்டியல் தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 2024 மாதத்தில் 28,917 புதிய நிறுவனங்கள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் சமூகப் பாதுகாப்பு வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன, இதனால் அதிகமான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு ஆண்டு பகுப்பாய்வு ஆகஸ்ட் 2023 உடன் ஒப்பிடும்போது நிகர பதிவுகளில் 6.80% வளர்ச்சியைக் காட்டுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீடு

 

விவரம்       

ஆகஸ்ட் 2023

ஆகஸ்ட் 2024

வளர்ச்சி

இம்மாதத்தில் பதிவு செய்த புதிய ஊழியர்களின் எண்ணிக்கை

19.42 லட்சம்

20.74 லட்சம்

1.32 லட்சம்

           

தரவுகளின் மூலம், மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த 20.74 லட்சம் ஊழியர்களில், 9.89 லட்சம் ஊழியர்கள், அதாவது மொத்த பதிவுகளில் சுமார் 47.68% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஊதியத் தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, ஆகஸ்ட் 2024 இல் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 4.14 லட்சமாக இருப்பதைக் குறிக்கிறது. இது தவிர, ஆகஸ்ட் 2024 மாதத்தில் மொத்தம் 60 திருநங்கை ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர், இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதற்கான இஎஸ்ஐசி-யின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருப்பதால் ஊதியத் தரவு தற்காலிகமானதாகக் கருதப்படுகிறது.

*****

PKV/KV

 

 

 

 




(Release ID: 2068454) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi , Marathi