உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்க மாநிலம் பத்ராபோலில் உள்ள துறைமுகத்தில் பயணிகள் முனைய கட்டிடம் மற்றும் மைத்ரி துவாரை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார்
Posted On:
26 OCT 2024 1:07PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா நாளை மேற்கு வங்கத்தின் பத்ராபோலில் உள்ள துறைமுகத்தில் பயணிகள் முனைய கட்டிடம் மற்றும் மைத்ரி துவாரை திறந்து வைக்கிறார் . அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் நமது கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை முன்னெடுத்துச் செல்ல இந்திய நில துறைமுக ஆணையத்திற்கு ஒரு புதிய வேகம், திசை மற்றும் பரிமாணத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.
தெற்காசியாவின் மிகப்பெரிய தரைவழி துறைமுகமான பத்ராபோல் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான வர்த்தகத்திற்கான முக்கிய நுழைவாயிலாகும். இது வர்த்தகம் மற்றும் பயணிகள் இயக்கத்தின் அடிப்படையில் இந்தியா-வங்காளதேசத்திற்கான மிக முக்கியமான நில எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான அடிப்படை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதம் (மதிப்பின் அடிப்படையில்) இந்தத் துறைமுகம் வழியாக நடைபெறுகிறது. இது இந்தியாவின் எட்டாவது பெரிய சர்வதேச குடியேற்ற துறைமுகமாகும், மேலும் இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையில் ஆண்டுதோறும் 23.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்குகிறது.
பயணிகள் முனைய கட்டிடம்
பத்ராபோலில் உள்ள புதிய பயணிகள் முனைய கட்டிடம் பிராந்தியத்தின் உள்கட்டமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும், இது இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான பயண அனுபவத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ளது.
மைத்ரி துவார்
மைத்ரி துவார் என்பது இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட பூஜ்ஜிய பாதையில் ஒரு கூட்டு சரக்கு வாயில் ஆகும்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, கடந்த ஆண்டு மே 9ந்தேதி அடிக்கல் நாட்டினார்.
இது சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக நுழைவாயிலாக இருக்கும்.
*****
PKV/KV
(Release ID: 2068422)
Visitor Counter : 28