பாதுகாப்பு அமைச்சகம்
'மறுவரையறை செய்யப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக டிஆர்டிஓவை மாற்றியமைத்தல்' குறித்து விவாதிக்க டிஆர்டிஓ இயக்குநர்களின் இரண்டு நாள் மாநாடு புனே-யில் தொடங்கியது
Posted On:
25 OCT 2024 6:47PM by PIB Chennai
டிஆர்டிஓ இயக்குநர்களின் இரண்டு நாள் மாநாடு-2024, அக்டோபர் 25, 2024 அன்று புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங்கியது. டிஆர்டிஓவின் இந்த வருடாந்திர நிகழ்வை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தற்போதைய வளர்ந்து வரும் உலகளாவிய சூழலில், தொழில்நுட்ப தலைமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, சீர்திருத்தம், செயல்பாடு, ஒரு அமைப்பாக டிஆர்டிஓவை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
'மறுவரையறை செய்யப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, டிஆர்டிஓவை மாற்றியமைத்தல்' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, இந்த மாநாட்டில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. டி.ஆர்.டி.ஓ.வை மிகவும் திறமையான அமைப்பாக மாற்றியமைப்பதற்காக செயல்படுத்தப்பட்ட அல்லது செயல்படுத்தப்பட்டு வரும் டி.ஆர்.டி.ஓ சீர்திருத்தங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு தெரிவிப்பதே இதன் நோக்கமாகும்.
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் நாட்டை முன்னணி நாடாக மாற்றுவதற்கு தொழில்துறை மற்றும் கல்வியாளர்களை விரிவாக ஈடுபடுத்துவதன் மூலம், வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலியலை உருவாக்குவது குறித்த விவாதங்கள் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு ஆலோசனை அமர்வுகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினரின் பங்கேற்புடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் திறன் மேம்பாட்டுக்கான முழுமையான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னோக்கி செல்வதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்த மாநாடு நிறைவடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2068193
***
MM/AG/DL
(Release ID: 2068219)
Visitor Counter : 21