சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சட்ட நிருபர்கள் அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியை இந்திய லோக்பால் அமைப்பு நீட்டித்துள்ளது

प्रविष्टि तिथि: 25 OCT 2024 4:07PM by PIB Chennai

2024, அக்டோபர் 18  அன்று இந்திய லோக்பால் அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம், இந்திய லோக்பால் அமைப்புக்கான சட்ட நிருபர்கள் அங்கீகார விதிமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 நவம்பர் 8 வரை நீட்டித்துள்ளது.

இந்திய லோக்பால் அமைப்பு  சட்ட நிருபர்களை அங்கீகரிப்பதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவை 25 செப்டம்பர் 2024 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம் இந்திய லோக்பாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், 25 செப்டம்பர் 2024 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம், ஆர்வமுள்ள மற்றும் தகுதியான பத்திரிகையாளர்கள் / நிருபர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் இந்திய லோக்பாலில் சட்ட நிருபர்களாக அங்கீகாரம் பெற 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068098

 

*****

TS/SMB/RR/KR/DL


(रिलीज़ आईडी: 2068167) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati