தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்தின் சுவிதா 2.0 செல்பேசி செயலி மூலம் பிரசார அனுமதி கோரி விண்ணப்பிப்பதில் வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் கூடுதல் வசதி
Posted On:
24 OCT 2024 6:31PM by PIB Chennai
வேட்பாளர்களும் கட்சிகளும் இப்போது புதிய, மேம்படுத்தப்பட்ட சுவிதா 2.0 செல்பேசி செயலியில் பிரச்சாரம் தொடர்பான அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு முன்பு வேட்பாளர்களும் கட்சிகளும் செல்பேசி செயலியில் உள்ள ஒப்புதல்களை மட்டுமே கண்காணிக்க முடியும். அனுமதி கோருவதற்கு நேரடியாக அல்லது இணைய அடிப்படையிலான போர்ட்டல் மூலமே விண்ணப்பம் செய்ய முடியும். அண்மையில் மேம்படுத்தப்பட்ட சுவிதா செயலி, பிரச்சாரம் தொடர்பான அனைத்து அனுமதிகளையும் தேடிப் பெறுவதற்கும், கண்காணிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஒரே இடத் தீர்வாக அமைகிறது. அத்துடன் செய்திக் குறிப்புகள், சமீபத்திய அறிவுறுத்தல்கள் / உத்தரவுகள் போன்ற தேர்தல் ஆணைய புதுப்பிப்புகளை விரல் நுனியில் தருகிறது.
புதிய செயலியை அறிமுகம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தலில் வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்கு தேவையான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஆணையம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், சுவிதா 2.0 தொடங்கப்படுவது தொழில்நுட்ப ரீதியாக அதிகாரம் பெற்ற தேர்தல்களை நோக்கிய மற்றொரு செயலாகும் என்றும் கூறினார். தேர்தலின் போது எப்போதும் பயணத்தில் இருக்கும் வேட்பாளர்கள் இப்போது தங்கள் செல்பேசிகளிலிருந்து அனுமதிகளுக்கு எளிதாக விண்ணப்பிக்கவும் கண்காணிக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.
சுவிதா 2.0 செல்பேசி செயலி பிரச்சாரம் தொடர்பான எந்தவொரு அனுமதிக்கும் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்கள், அறிவிப்புகள் மற்றும் பிற ஆவணங்களைப் பயனர்கள்பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. அனுமதி கோரிக்கையில் ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின், கோரிக்கையில் உள்ள உத்தரவு நகலையும் பயன்பாட்டிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். சுவிதா 2.0 செல்பேசி செயலி பயனர் பயன்படுத்த எளிதானதாகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.
சுவிதா 2.0 செல்பேசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் செயலி ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
ஆண்ட்ராய்ட் செல்பேசிக்கு சுவிதா 2.0 செல்பேசி செயலிக்கான இணைப்பு:https://play.google.com/store/apps/details?id=suvidha.eci.gov.in.candidateapp&pli=1
ஐஓஎஸ் செல்பேசிக்கு சுவிதா 2.0 செல்பேசி செயலிக்கான இணைப்பு: https://apps.apple.com/app/suvidha-candidate/id6449588487
*****
(Release ID: 2067839)
TS/SMB/KR
(Release ID: 2068034)
Visitor Counter : 35