குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் சத்தீஸ்கரில் அக்டோபர் 25 முதல் 26 வரை பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 24 OCT 2024 6:24PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 அக்டோபர் 25 முதல் 26 வரை சத்தீஸ்கரில் பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 25-ம் தேதி ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். பின்னர், ராய்ப்பூரில் உள்ள என்.ஐ.டி.யின் 14-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், நயா ராய்ப்பூரில் உள்ள புர்கௌதி முக்தாங்கனுக்கும் செல்கிறார்.

அக்டோபர் 26-ம் தேதி பிலாய் ஐஐடியின் நான்காவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். ராய்ப்பூரில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு சுகாதார அறிவியல் மற்றும் சத்தீஸ்கர் ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

***

IR/AG/DL


(Release ID: 2067866) Visitor Counter : 51