பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடலோர காவல்படைக்கு ஆறு ஏர் குஷன் வாகனங்கள் கொள்முதல் செய்ய கோவாவின் சௌகுலே தனியார் நிறுவனத்துடன் ரூ .387.44 கோடி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
24 OCT 2024 4:08PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகம், 2024 அக்டோபர் 24 அன்று, இந்திய கடலோர காவல்படைக்கு மொத்தம் ரூ.387.44 கோடி செலவில் ஆறு ஏர் குஷன் வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கோவாவின் சௌகுலே தனியார் நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. 'ஹோவர் கிராஃப்ட்ஸ்' என்றும் அழைக்கப்படும் இந்த நீர்-நில கப்பல்கள் கொள்முதல் (இந்திய) பிரிவின் கீழ் வாங்கப்படும்.
இந்த ஏர்குஷன் வாகனங்கள் அரசின் தற்சார்பு இந்தியா நோக்கத்திற்கு ஏற்ப முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். இந்தத் திட்டம் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உள்நாட்டு துணை நிறுவனங்களின், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்தும்.
இந்தக் கொள்முதல் இந்திய கடலோர காவல்படையின் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பில் கவனத்தை வலுப்படுத்தவும் செய்கிறது. இந்த நவீன ஏ.வி.வி.க்கள் அதிவேக கடலோர ரோந்து, உளவு, இடைமறிப்பு, தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆபத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் படகுகளுக்கு உதவி புரிதல் உள்ளிட்ட பல்நோக்கு கடல்சார் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
----------
TS/IR/RS/KR/DL
(Release ID: 2067805)
Visitor Counter : 30