பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0 மூலம் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் திறமையை மேம்படுத்தியுள்ளது

Posted On: 22 OCT 2024 2:46PM by PIB Chennai

 

நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காண்பதில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், தேவைப்படும் திறமையை மேம்படுத்தி நகர்ப்புற காலியிடங்களை அழகுபடுத்தி, பராமரிப்பதன் வாயிலாக  சிறப்பு இயக்கம் 4.0 -ல் தீவிரமாக பங்கேற்றது. இந்த முன் முயற்சியானது அமைச்சகத்துடன் இணைந்த மற்றும் சார்பு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக பரிந்துரைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சரவை பரிந்துரைகள், மாநில அரசுகளின் பரிந்துரைகள், சிபிகிராம் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காண்பதே சிறப்பு இயக்கத்தின் நோக்கம் ஆகும்.

பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ தொலைநோக்கிற்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளது. இந்தத் தூய்மை இயக்கத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் முக்கிய பங்கு வகிப்பதோடு, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் தூய்மையை கடைபிடிப்பது என தனது கடமைகளை நிறைவேற்றியதன் மூலம், மேற்குறிப்பிட்ட இடங்களில் தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதை கண்கூடாக காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2067028

***

TS/MM/AG/KV


(Release ID: 2067053) Visitor Counter : 62