பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசுமுறைப் பயணம்

Posted On: 21 OCT 2024 11:00AM by PIB Chennai

கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 21 முதல் 24 ஆம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இருநாடுகளுக்கும் இடையே அனைத்துத் துறைகளிலும் விரிவான, உத்திப்பூர்வ கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில், இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தப் பயணம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவுக்கும்-ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே கடல்சார் இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைத்து இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை கண்டறிவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.  

கடற்படைத் தளபதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பைலட் சயித் பின் ஹம்தான் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.  அமீரகத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லுாரிக்கு செல்லும் அவர், அங்குள்ள மாணவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார்.  இந்தப் பயணத்தின் போது, இந்தியா-ஐக்கிய அரபு அமீரக  இருதரப்பு கடல் பயிற்சியின் 3-வது பதிப்பை அவர் பார்வையிடுவார். 

இந்திய கடற்படைக்கும்-ஐக்கிய அரபு அமீரக கடற்படைக்கும் இடையே, துறைமுக அழைப்புகள், இருதரப்பு கடற்படை பயிற்சி, சிறப்பு அழைப்பிலான பயணங்கள், கடற்படை பணியாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக்குழு பேச்சுவார்த்தை உட்பட ஒத்துழைப்பை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**************

PKV/KV


(Release ID: 2066602) Visitor Counter : 44