தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான ஊடக பிரதிநிதிகள் பதிவு தொடங்கியது

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா மாநிலம் பனாஜியில் 2024 நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திரைப்பட விமர்சகர்கள்  அல்லது கதை சொல்வதில் ஆர்வம் மிகுந்த இளம் பத்திரிகையாளர்கள், இந்த திரைப்படவிழாவில் பங்கேற்பதன் மூலம், திரைப்படத்துறையின் சிறந்து விளங்குவதற்கான அனுபவத்தை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

இதில் பங்கேற்கும் ஊடக பிரதிநிதிகளுக்கான பெயர் பதிவு இன்று (18.10.2024) தொடங்கியது. 2024 ஜனவரி 1-ம் தேதி  21 வயதைப் பூர்த்தி செய்து, பத்திரிகைகள், மின்னணு, டிஜிட்டல் அல்லது ஆன்லைன் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர், புகைப்படக்காரர், கேமராமேன், டிஜிட்டல் படைப்பாளிகள் தங்களது பெயரை பதிவு செய்வதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.  வயது வரம்பை பூர்த்தி செய்து எந்த நிறுவனத்திலும் பணியாறறாத சுதந்திரமான பத்திரிகையாளர்களும் (Freelance Journalist)  இதில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066136

*** 

MM/KPG/DL

iffi reel

(Release ID: 2066208) Visitor Counter : 76