பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளை உணர்வுபூர்வமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் அர்த்தமுள்ள முறையில் தீர்ப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள்
Posted On:
16 OCT 2024 11:18AM by PIB Chennai
மத்திய அரசு தனது ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் வழிமுறையை மறுஆய்வு செய்த பின்னர் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சிபிகிராம்ஸ்) கீழ்க்கண்ட தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப மிகவும் உணர்திறன்மிக்கதாகவும், அணுகக்கூடியதாகவும் , அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது. மத்திய அரசின் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு சான்றாக, குறைகளை விரைவாகவும், திறமையாகவும் தீர்ப்பதற்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழிவகை செய்கின்றன.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளைக் கையாள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களின் முக்கிய சிறப்பஅம்சங்கள் பின்வருமாறு:
1. அமைச்சகங்கள், துறைகள் ஓய்வூதியதாரர்களின் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் . குறைகளை நிவர்த்தி செய்ய நீண்ட கால அவகாசம் தேவைப்படும் நேர்வுகளில், இடைக்கால பதில் இணையதளத்தில் அளிக்கப்படலாம் .2. குறைகள் 'முழு அரசு அணுகுமுறை' என்பதன் கீழ் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், 'இது இந்த அலுவலகத்துடன் தொடர்புடையது அல்ல' என்று கூறி குறைகளைச் சுருக்கமாக முடிக்கக்கூடாது.
3. குறை தீர்க்கப்படும் நேரத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை நிரப்பப்பட வேண்டும்.
4. இணையதளத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான குறைகளை அமைச்சகங்கள் / துறைகள் மாதாந்திர மதிப்பாய்வு செய்யும், குறைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரமான முறையில் தீர்வு காண்பதை உறுதி செய்யும்.
5. முதுநிலை அலுவலர் குறைகளின் போக்கை ஆராய்ந்து, குறைகளின் நிகழ்வைத் தடுக்க அடிப்படைக் காரணப் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும்.
6. குறை தீர்க்கப்பட்ட 30 நாட்களுக்குள் மனுதாரர் தனது குறை தீர்க்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். தொடர்புடைய ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் இணைக்கவும்.
7. அமைச்சகம் / துறையிடம் நேரடி வடிவில் தாக்கல் செய்யப்பட்ட குறைதீர்ப்பு விண்ணப்பங்கள் , இந்த குறைகளை முறையாக கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக சிபிகிராம்ஸ் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .
PKV/KR
***
(Release ID: 2065245)
Visitor Counter : 44