ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0-ல் ஜல் சக்தி அமைச்சகத்தின் சாதனைகள்

Posted On: 16 OCT 2024 10:22AM by PIB Chennai

தூய்மை, கோப்புகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல், பதிவேடுகள் மேலாண்மை முறையை ஆய்வு செய்தல், அலுவலக இடங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், கழிவுப்பொருட்களை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட மத்திய அரசின் முயற்சியான சிறப்பு இயக்கம் 4.0, தீவிரமன முறையில் ஜல்சக்தித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துறை, அதன் துணை அமைப்புகளால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நிலுவையில் உள்ள கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அலுவலகங்கள் தொடர்பான பிற பணிகளை முடிக்கவும் பணியாற்றி வருகின்றனர்.

 

சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் செயலாளர் திரு சுபோத் யாதவ் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் இலக்குகளை அடைவதற்கு இத்துறையும் அதன் அமைப்புகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து திரு சுபோத் யாதவ் திருப்தி தெரிவித்தார்.

 

சிறப்பு இயக்கம் 4.0-ன் முடிவில் இலக்குகளை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் துறையும் அதன் அமைப்புகளும் தொடர்ந்து மேற்கொள்கிறது.

 

14.10.2024 வரை 5166 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது இலக்கில் 82.6% ஆகும். 115 இடங்கள் தூய்மை செய்யப்பட்டுள்ளன. இது இலக்கில் 33% ஆகும். புதுதில்லியில் உள்ள ஷர்ம் சக்தி பவன் வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது.

தேவையற்ற பொருட்கள் விற்பனை மூலம் ரூ.3,01,120/- வருவாய் கிடைத்துள்ளது. சுமார் 14520 சதுர அடி பரப்பளவு இடம், தூய்மைப்படுத்துதல் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

PLM/KR

Release ID: 2065203

 

***



(Release ID: 2065238) Visitor Counter : 14