மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
திரு தர்மேந்திர பிரதான் 3 செயற்கை நுண்ணறிவு – சுகாதாரம், வேளாண்மை மற்றும் நீடித்த நகரங்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்களை 2024 அக்டோபர் 15 அன்று தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
14 OCT 2024 1:28PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், சுகாதாரம், வேளாண்மை மற்றும் நிலையான நகரங்களில் கவனம் செலுத்தும் மூன்று செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு மையங்களை 2024 அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, செயற்கை நுண்ணறிவுக்கான இந்த மூன்று திறன் மேம்பாட்டு, தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முன்னணி கல்வி நிறுவனங்களால் வழிநடத்தப்படும். அவர்கள் இம்மூன்று பகுதிகளில் இடைநிலை ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். அதிநவீன பயன்பாடுகளை உருவாக்குவார்கள் மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்குவார்கள். இந்த முயற்சி ஒரு பயனுள்ள செயற்கை நுண்ணறிவுச் சூழல் அமைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இந்த முக்கியமான துறைகளில் தரமான மனித வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி, இந்தியாவுக்கு செயற்கை நுண்ணறிவுப் பணியைச் செய்யுங்கள் என்ற பார்வையின் ஒரு பகுதியாக, 2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பின் பத்தி 60-ன் கீழ், இந்த மையங்களை நிறுவுவது அறிவிக்கப்பட்டது. இதனுடன் இணைந்து, 2023-24-ம் நிதியாண்டு முதல் 2027-28-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், ரூ.990.00 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில், மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்களை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முன்னெடுப்பை செயல்படுத்துவதை மேற்பார்வையிட, ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீதர் வேம்பு தலைமையில் தொழில்துறை சார்ந்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
---
(Release ID 2064613)
IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2064650)
आगंतुक पटल : 121