பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் இடையே நியூசிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                10 OCT 2024 7:18PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் மேதகு திரு. கிறிஸ்டோபர் லக்சனும் வியன்டியான் நகரில் நடைபெற்று வரும் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, பால்வளம், வேளாண் தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுலா, விண்வெளி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர். அடிக்கடி ஏற்படும் உயர்மட்ட தொடர்புகள் இருதரப்பு உறவுகளுக்கு வலுவான உத்வேகத்தை அளித்துள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர். இந்தச் சூழலில், இந்தியக் குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியூசிலாந்திற்கு மேற்கொண்ட பயணம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் சேர்வது என்ற நியூசிலாந்தின் முடிவை பிரதமர் வரவேற்றார்.
பன்னாட்டு அரங்குகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை பிரதமர்கள் புதுப்பித்ததுடன், இந்திய-நியூசிலாந்து உறவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தினர்.
பரஸ்பரம் வசதியான தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருமாறு திரு லக்சனுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார், அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
*****
RB/DL
                
                
                
                
                
                (Release ID: 2064097)
                Visitor Counter : 67
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam