பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனம்- நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இந்திய மாநாடு 2025 புதுதில்லியில் நடைபெறுகிறது
Posted On:
09 OCT 2024 6:32PM by PIB Chennai
மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இந்திய மாநாடு-2025-ஐ பிரஸ்ஸல்ஸில் உள்ள சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து புதுதில்லி, பாரத் மண்டபத்தில் 2025 பிப்ரவரி 10-14 தேதிகளில் நடத்த உள்ளது. இம்மாநாட்டின் கருப்பொருள்: "அடுத்த தலைமுறை நிர்வாக சீர்திருத்தங்கள் – குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கடைகோடியை சென்றடைதல்"என்பதாகும்.
கல்வியாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐஐடி / ஐஐஎம் / பல்கலைக்கழகங்கள் / ஐஐபிஏ / எச்ஐபிஏ / ஏடிஐ போன்ற பொது நிர்வாக நிறுவனங்கள் சர்வதேச நிபுணர்களுடன் கலந்துரையாடவும், பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த ஐஐஏஎஸ் – டிஏஆர்பிஜி மாநாட்டின் மூலம் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை முன்வைக்கவும் இந்த நிகழ்வு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும். ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை ஆராய்ச்சி வெளியீடுகளாக/ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடுவதற்கான வாய்ப்பையும் இது வழங்கும்.
5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுமார் 500 முதல் 600 வரையிலான தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்கான பதிவு 2024 அக்டோபர் 2 முதல் தொடங்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் பதிவுசெய்யவும், ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கவும் https://iias-iisa.org/iias-darpg-indiaconference2025/ என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*****
IR/RS/DL
(Release ID: 2063658)
Visitor Counter : 34