பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐ.என்.எஸ் தல்வார் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது

प्रविष्टि तिथि: 09 OCT 2024 5:14PM by PIB Chennai

2024 அக்டோபர் 06 முதல் 18 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்திய, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளின் கூட்டு பன்னாட்டு கடல்சார் பயிற்சியான இப்சாமரின் எட்டாவது பதிப்பில் பங்கேற்க, இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பல், ஐஎன்எஸ் தல்வார் 06 அக்டோபர் 24 அன்று தென்னாப்பிரிக்காவின் சைமன் டவுனுக்கு சென்றடைந்தது.

இந்த பயிற்சி மூன்று கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையை மேம்படுத்துவதையும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துறைமுக கட்டத்தில் நடைபெறும்  இப்பயிற்சியில் தொழில்முறை பரிமாற்றங்கள், சேதக் கட்டுப்பாடு மற்றும் தீயணைப்பு பயிற்சிகள், தேடல் மற்றும் பறிமுதல் பயிற்சிகள், குறுக்கு போர்டிங், விமான பாதுகாப்பு விரிவுரைகள், கூட்டு நீர்மூழ்கி நடவடிக்கைகள், பெருங்கடல் ஆளுமை கருத்தரங்கு, விளையாட்டு தொடர்புகள், சிறப்புப் படைகள் மற்றும் இளநிலை அதிகாரிகளிடையே கலந்துரையாடல் ஆகியவை அடங்கும்.

அமைதியான கடல்சார் களம் மற்றும் நேர்மறையான கடல்சார் சூழல் என்ற பொதுவான இலக்கை நோக்கி பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கடலோர நாடுகளின் கடற்படைகளிடையே பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்தும் நட்பின் முக்கிய பாலங்களாக பலதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063543

***

IR/RS/DL


(रिलीज़ आईडी: 2063575) आगंतुक पटल : 88
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi