பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையும், கார்கில் வெற்றியின் 25-வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் வகையில் தோய்ஸிலிருந்து தவாங் வரையிலான விமானப்படை வீரர் விஜேதா கார் பயணம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது
Posted On:
08 OCT 2024 5:15PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் (IAF) 92 வது ஆண்டு நிறைவு மற்றும் 1999 கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 'வாயு வீர் விஜேதா' கார் பயணத்தை, மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா, அக்டோபர் 08, 2024 அன்று, லடாக்கில் உள்ள தோய்ஸில் இருந்து முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 50-க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள், உத்தராகண்ட் போர் நினைவுச்சின்னத்தின் உறுப்பினர்கள் அடங்கிய குழு, சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,068 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான விமானப்படை நிலையங்களில் ஒன்றான தோய்ஸிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கிற்கு புறப்பட்டது .
மொத்தம் 7,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ஐஏஎஃப்-யுபிள்யூஎம் கார் பயணத்தை 2024, அக்டோபர் 01, அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திலிருந்து தோய்ஸுக்கு புறப்பட்ட குழுவினரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அன்புடன் வழியனுப்பி வைத்தார். இது ஒன்பது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வழியாக பயணித்து, லே, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு, சண்டிகர், டேராடூன், ஆக்ரா, லக்னோ, கோரக்பூர், தர்பங்கா, பாக்டோக்ரா, ஹசிமாரா, குவஹாத்தி, தேஜ்பூர் மற்றும் திராங் ஆகிய இடங்களில் தங்கி, 2024, அக்டோபர் 29 அன்று தவாங்கில் நிறைவடையும்.
இந்தப் பயணத்தின் போது, குழு இளைஞர்களுடன் ஈடுபட்டு ஆயுதப் படைகளில் சேர அவர்களை ஊக்குவிக்கும். இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற வரலாறு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்; பல்வேறு போர்கள் மற்றும் மீட்புப் பணிகளில், விமானப்படை வீரர்களின் வீரச் செயல்கள்; மற்றும் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இளைஞர்களை ஈர்க்கவும் இது உதவும். இந்தப் பயணத்தில் விமானப்படை முன்னாள் தளபதிகள் பலர் பல்வேறு பிரிவுகளாக பங்கேற்க உள்ளனர்.
---
MM/KPG/DL
(Release ID: 2063249)
Visitor Counter : 28