சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
உலக பெருமூளை வாத தினத்தையொட்டி தேசிய மாநாடு 2024 அக்டோபர் 06 அன்று தில்லியில் நடைபெற்றது
Posted On:
08 OCT 2024 5:30PM by PIB Chennai
ஆட்டிசம், மூளை முடக்குவாதம், மனவளர்ச்சி குன்றியோர் (அறிவுசார் குறைபாடு), பல்வகை ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய அறக்கட்டளை 2024 அக்டோபர் 06 அன்று உலக பெருமூளை வாத தினத்தையொட்டி தேசிய மாநாட்டை புதுதில்லியில் ஏற்பாடு செய்தது. இந்த அறக்கட்டளை இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பாகும்.
மூளை முடக்குவாதத் துறையைச் சார்ந்த தலைசிறந்த வல்லுநர்கள் இந்த தேசிய மாநாட்டில் பங்கேற்றனர். தேசிய அறக்கட்டளையின் இணைச் செயலாளரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு கே.ஆர்.வைத்தீஸ்வரன் தொடக்க உரையாற்றினார். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதான நீரோட்டத்தில் இணைய உதவும் வகையில் பெருமூளை வாதத் துறையில் புதுமைகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
குழந்தை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், பிரயாக்ராஜில் உள்ள திரிஷ்லா அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் ஜிதேந்திர குமார் ஜெயின், பெருமூளை வாதம் கொண்ட குழந்தைகளை நிர்வகிப்பதில் முக்கியமான தகவல்களை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தேசிய அறக்கட்டளையின் வாரிய உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் உட்பட 130 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063222
**
PLM/RS/DL
(Release ID: 2063243)
Visitor Counter : 47