ஆயுஷ்
மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் 100 நாள் சாதனை
Posted On:
08 OCT 2024 3:35PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்திற்குட்பட்ட ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (சி.சி.ஆர்.ஏ.எஸ்) கீழ் செயல்படும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஏ.ஆர்.ஐ), தற்போதைய அரசின் முதல் 100 நாட்களில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது. இந்த சாதனைகள், ஆயுர்வேதத்தின் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பரந்த ஆயுஷ் சூழலியல் அமைப்புக்கு பங்களிப்பதற்கும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
முதியோர் பராமரிப்பு திட்டம் இலக்குகளை விஞ்சியது: முதியோரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக யில், மூத்த குடிமக்கள் 2,000 பேருக்கு சிகிச்சையளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இலக்கை விஞ்சிய இந்த நிறுவனம், அதன் பிரத்யேக வெளிநோயாளிகள் பிரிவு மூலம், 2,272 முதியவர்களை சென்றடைந்துள்ளது. இந்த திட்டம் முழுமையான ஆயுர்வேத நடைமுறைகளின் அடிப்படையில், ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை வழங்கியது. இந்த முயற்சி சுகாதார கவலைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.
ஷெட்யூல்டு வகுப்பினர் துணைத் திட்டத்தின் கீழ் உதவி: ஷெட்யூல்டு வகுப்பினர் துணைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல் 100 நாட்களுக்குள் 80 பயணங்கள், 8 முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, 1,500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது. இந்த நிறுவனம், 480 பேரின் வாழ்க்கை நிலைமைகள், உணவுப் பழக்கம் மற்றும் பரவலான நோய்களை ஆய்வு செய்ய ஒரு விரிவான கணக்கெடுப்பையும் நடத்தியது. 1,980 பரிசோதனைகள் மூலம், வாழ்க்கை முறை கோளாறுகள் அடையாளம் காணப்பட்டு, பின்தங்கிய பகுதி மக்களின் தடுப்பு சுகாதாரத்திற்கான செயலூக்கமான அணுகுமுறையைக் குறிக்கிறது.
லேடி ஹார்டிங் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நிறுவுதல்: புது தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மருத்துவத் துறையை நிறுவுவதற்கு கே.ஏ.ஆர்.ஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி விரிவான சுகாதாரப் பராமரிப்பின் தேவையை நிவர்த்தி செய்து, நவீன மருத்துவ சேவைகளுடன் ஆயுஷ் அமைப்புகளை ஒருங்கிணைப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. அடிப்படை புறநோயாளிகள் பிரிவு மற்றும் பஞ்சகர்மா நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, இது இந்த முன்னோடி துறைக்கு அடித்தளம் அமைக்கிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் (ஜே.என்.யூ) நீடித்த ஒத்துழைப்பு: ஒரு குறிப்பிடத்தக்க கல்வி ஒத்துழைப்பில், ஆயுஷ் துறையில் தொழில்முனைவோர் மற்றும் வணிகமயமாக்கல் குறித்த ஆராய்ச்சி திட்டத்தைத் தொடங்க ஜே.என்.யூ உடன் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆயுஷ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான மேலாண்மை கொள்கைகளை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் முதல் 100 நாட்களுக்குள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. ஆயுஷின் ஆராய்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது
ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளை மேம்படுத்துதல்: மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் தில்லி கண்டோன்மென்ட் படைத்தள மருத்துவமனை மற்றும் ஹிண்டனில் விமானப்படை மருத்துவமனையில் உள்ள இரண்டு மதிப்புமிக்க மல்டி சென்டர் ஆய்வுத் திட்டங்களை முடித்துள்ளது. எய்ம்ஸ், சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் ஜே.என்.யூ போன்ற உயர்மட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய ஒன்பது கூட்டு ஆய்வுகளுடன், 19 ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில், இந்த ஆராய்ச்சி நிறுவனம், ஒவ்வாமை நாசியழற்சி பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை மருத்துவ இணைய ஆராய்ச்சி இதழ் ஜெஎம்ஐஆர் வெளியிட்டன.
ஆயுர்வேதம் மூலம், நோயாளியின் பாதுகாப்பை ஊக்குவித்தல்: நோயாளி பாதுகாப்பு தினத்தை குறிக்கும் வகையில், மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கிற்கு என்பிவிசிசி மற்றும் ஏஐஐஏ, புதுதில்லி ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 2024, செப்டம்பர் 17 அன்று நோயாளி பாதுகாப்பு தினத்தைக் குறிக்கும் விதமாக, ஆயுஷ் முறைகளில் கண்டறியும் நடைமுறைகளின் பங்கை மையமாகக் கொண்டு லோதி சாலையில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் தேசிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. இது இந்தியா முழுவதும் 150 மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களை ஒன்றிணைத்து, ஆயுஷ் நடைமுறைகளுக்குள் நோயாளி பாதுகாப்பு குறித்த அதிக விழிப்புணர்வை வளர்த்தது.
அங்கீகாரம் மற்றும் அதிகாரமளித்தல் முயற்சிகள் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் தேசிய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெற்ற முதல் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனமாகும். மேலும் இந்நிறுவனம் நோயியல் மற்றும் உயிரி வேதியியல் ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய அமைப்பின் தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ளது. இது தவிர, இந்த நிறுவனம் ஆயுஷ் அதிகாரிகளுக்கு நிர்வாகப் பயிற்சியை வழங்கியது, அவர்களின் திறன் மேம்பாட்டிற்கான முக்கியமான மேலாண்மை திறன்களை அவர்களுக்கு அளித்தது.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளரிடமிருந்து என்ஏபிஎச் அங்கீகார சான்றிதழைப் பெறுதல்
மக்கள் தொடர்பு: தூய்மை இருவார மற்றும் ஊட்டச்சத்து மாதம் உள்ளிட்ட தேசிய இயக்கங்களில் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தீவிர பங்கேற்பை மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது. பொது விழிப்புணர்வு திட்டங்கள், இணையவழிக் கருத்தரங்கு மற்றும் தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்திருந்தது.
9-வது ஆயுர்வேத தினம்: 9-வது ஆயுர்வேத தினத்தை 2024, அக்டோபர் 29 அன்று கொண்டாடுவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. விழிப்புணர்வு கருத்தரங்குகள், இணையவழி கருத்தரங்குகள், பொது விரிவுரைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் விநியோகம், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் போன்ற பிற நடவடிக்கைகள் ஆயுர்வேத தினத்தின் கீழ் இடம்பெறும்.
****
(Release ID: 2063170)
MM/KPG/K/DL
(Release ID: 2063242)
Visitor Counter : 44