சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
என்ஹெச்ஐடிசிஎல், 2023-24-ம் நிதியாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது
Posted On:
08 OCT 2024 5:05PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமான என்ஹெச்ஐடிசிஎல் (NHIDCL) 13 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் (வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர், லடாக், அந்தமான் - நிக்கோபார் தீவுகள், உத்தராகண்ட்) உள்கட்டமைப்பு மேம்பாட்டில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில், என்ஹெச்ஐடிசிஎல் இந்த மாநிலங்களில் ரூ.20,851 கோடி செலவில் 1,160 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகளையும் பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.
***
PLM/RS/DL
(Release ID: 2063240)
Visitor Counter : 37