வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை துபாயில் திறக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2024 4:05PM by PIB Chennai
துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உள்ள இந்தியா அரங்கம், இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் (IIFT) முதல் வெளிநாட்டு வளாகத்தை நிர்வகிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 03 அக்டோபர் 2024 அன்று கையெழுத்தானது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறுகிய, நடுத்தர கால பயிற்சித் திட்டங்கள், முதன்மை திட்டமான எம்பிஏ (சர்வதேச வணிகம்) ஆகியவை அதன் வளாகத்தில் வழங்கப்படும்.
சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி, பயிற்சி, கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி மையமாகக் கருதப்படும் ஐஐஎஃப்டி, இந்தியாவுக்கு வெளியே தனது முதல் வளாகத்தை நிறுவுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் 3.5 மில்லியன் இந்திய சமூகத்திற்கு இந்த வளாகம் சிறந்த வாய்ப்பாக அமையும்.
துபாயின் எக்ஸ்போ சிட்டியில் ஐஐஎஃப்டி தனது முதல் வெளிநாட்டு வளாகத்தை நிறுவுவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வர்த்தக செயலாளர் திரு சுனில் பர்த்வால், துபாயில் உள்ள நிறுவனத்தின் வளாகம் ஐஐஎஃப்டியின் சர்வதேச விரிவாக்கத்திற்கு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று கூறினார்.
துபாயில் அதன் முதல் வெளிநாட்டு வளாகம் அதிநவீன ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களுடன் ஐஐஎஃப்டியை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று ஐஐஎஃப்டி துணை வேந்தர் பேராசிரியர் ராகேஷ் மோகன் ஜோஷி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062832
***
PLM/RS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2062901)
வருகையாளர் எண்ணிக்கை : 111