பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அனுபவ் விருதுகள் திட்டம்- 2025

Posted On: 07 OCT 2024 5:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 2015 மார்ச்சில் 'அனுபவ்' என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தியது. இது 'தகுதியான' ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை அரசுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

2015-ம் ஆண்டில் ஒரு வருடாந்திர விருது திட்டம் உருவாக்கப்பட்டது. இது அனுபவங்களை எழுதி சமர்ப்பிப்பதை ஊக்குவிப்பதற்கு உருவாக்கப்பட்டது. இதுவரை 7 அனுபவ விருது விழாக்களில் 10,886 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 7 அனுபவ் விருது விழாக்களில் பங்கேற்ற 78 மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு 59 அனுபவ் விருதுகளும், 19 நடுவர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய அரசு தேசிய அனுபவ் விருதுகள் திட்டம் -2025-ஐ அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க, மத்திய அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் தங்கள் அனுபவ குறிப்புகளை சமர்ப்பிக்கலாம். அதன்பிறகு, 31.03.2025 வரை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கட்டுரைகள் ஐந்து அனுபவ் விருதுகள் மற்றும் 10 நடுவர் சான்றிதழ்களுக்கு தேர்வு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு, www.pensionersportal.gov.in/anubhav   என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

***

PLM/RS/DL


(Release ID: 2062898) Visitor Counter : 71