சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதித்துறையில் சிறப்பு இயக்கம் 4.0
Posted On:
07 OCT 2024 2:36PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின் கீழ், நீதித்துறை, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்யவும், அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் சிறப்பு இயக்கம் 4.0 செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுதில்லியில் உள்ள ஜெய்சால்மர் இல்லத்தில் அமைந்துள்ள அதன் அலுவலக வளாகம், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி, புதுதில்லியில் உள்ள இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவற்றில் தூய்மை இயக்கம் தீவிரமாக நடைபெறுகிறது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும், இந்த இயக்கம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் (16/9/2024-30/9/2024 முதல்) அடையாளம் காணும் கட்டமாக நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள பல்வேறு விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன. 2/10/2024 முதல் 31/10/2024 வரையிலான இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது.
அண்மையில் முடிவடைந்த முதல் கட்ட இயக்கத்தின் போது, அடையாளம் காணப்பட்ட நிலுவைப் பணிகள் இரண்டாம் கட்ட இயக்கத்தின் போது நிறைவு செய்யப்படும். தேவையற்றப் பொருட்கள் அகற்றப்பட்டு, விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை அரசு கருவூலத்தில் வைப்பீடு செய்யப்படும்
சிறப்பு இயக்கம் 4.0-ன் போது இரண்டாம் கட்டத்தில், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்யவும் தூய்மையை நிறுவன மயமாக்கவும், தேவையற்றப் பொருட்களை அப்புறப்படுத்தவும், அலுவலக பணிச்சூழலை மேம்படுத்தவும் நீதித்துறை உறுதிபூண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062779
-------------
PLM/RS/KR
(Release ID: 2062800)
Visitor Counter : 41