பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை

प्रविष्टि तिथि: 04 OCT 2024 9:28AM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

 

தேசத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவை ஊக்கமளிக்கிறது என்று திரு மோடி பாராட்டியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"சிறந்த சுதந்திர போராட்ட வீரரும், பாரதத் தாயின் துணிச்சலான புதல்வருமான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளில், அவருக்கு லட்சக்கணக்கான மரியாதைகள். அவர் தனது புரட்சிகர நடவடிக்கைகள் மூலம், நாட்டின் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டில் அற்புதமான சக்தியை அளித்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான சேவை மனப்பான்மை, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

 

***

(Release ID: 2061820)

MM/RR/KR

 


(रिलीज़ आईडी: 2061872) आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam