இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நாளை நடைபெறும் எல்.என்.ஐ.பி.இ.யின் 10-வது பட்டமளிப்பு விழாவுக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2024 2:48PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நாளை நடைபெறும் எல்.என்..பி..யின் 10-வது பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

 

விழாவில், 2022-23 கல்வியாண்டில் படிப்பை முடித்த 320 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பி.பி.எட்., எம்.பி.எட்., படிப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், அவர்களின் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்படும். ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியான ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தல் பயிற்சி (RESET) திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்காக தீக்ஷா ஆரம்ப் (மாணவர் அறிமுகத் திட்டம்) திட்டத்தை டாக்டர் மாண்டவியா தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் சுறுசுறுப்பான விளையாட்டு காலத்தின் பின்னர் புதிய தொழில்களுக்கு மாறுவதற்கான திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 400 படுக்கைகள் கொண்ட புதிய விடுதி மற்றும் அதிநவீன ஸ்டுடியோவையும், மத்திய அமைச்சர் திறந்து வைக்கிறார்.

 

***

(Release ID: 2061496)

MM/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2061540) வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Telugu