குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்எஸ்எம்இ அமைச்சகம் மேம்படுத்தப்பட்ட தூய்மை மற்றும் சேவை வழங்கலுக்காக "சிறப்பு இயக்கம் 4.0" ஐ வெற்றிகரமாக தொடங்கியுள்ளது
Posted On:
03 OCT 2024 1:34PM by PIB Chennai
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் (MSME), "சிறப்பு இயக்கம் 4.0" ஐத் தொடங்கியுள்ளது. இது அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2024 வரை நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில், நிலுவையில் உள்ள தூய்மைப்பணிகளை நிறுவன மயமாக்குதல் மற்றும் நிலுவையில் உள்ள இடங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும். இந்த இயக்கம் தூய்மையை வலுப்படுத்துதல் மற்றும் அமைச்சின் இணைக்கப்பட்ட, துணை மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் கள அலுவலகங்களில், சேவை வழங்குவதை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
"சிறப்பு இயக்கம் 4.0" இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. 16 செப்டம்பர் 2024முதல் 30செப்டம்பர் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட ஆயத்த கட்டத்தின்போது, தூய்மை இயக்க இடங்களை அடையாளம் காணுதல், இட மேலாண்மை மற்றும் அலுவலகத்தை அழகுபடுத்துவதற்கான திட்டமிடல், கழிவு செய்யப்பட்ட மற்றும் தேவையற்ற பொருட்களை அங்கீகரித்தல் மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் தீர்வுக்கான மாநில அளவிலான அம்சங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இலக்குகளை அமைச்சகம் நிர்ணயித்தது.
2 அக்டோபர் 2024 முதல் 31 அக்டோபர் 2024 வரையிலான செயல்படுத்துதல் கட்டத்தில், திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை நிறைவேற்றுதல், தூய்மை முயற்சிகளை விரிவாக மேற்கொள்வது மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அமைச்சகம் கவனம் செலுத்தும். எம்.எஸ்.எம்.இ அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து பிரிவுகள், சட்டரீதியான அமைப்புகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் கள அலுவலகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் "சிறப்பு இயக்கம் 4.0"-ஐ வெற்றிகரமாக்க பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்: இயக்கத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும், சுமூகமாகவும், திறம்படவும், செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியப் பணிகளை வெற்றிகரமாக அடையாளம் காணுதல்: தூய்மை இயக்க தளங்களை அடையாளம் காணுதல், அலுவலகத்தை அழகுபடுத்துதல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளை நிவர்த்தி செய்தல் போன்ற, பல்வேறு ஆயத்த பணிகள் செயல்படுத்தப்பட்டன, இது இயக்கத்தின் நோக்கங்களுக்கு பங்களித்தது.
விழிப்புணர்வு முயற்சிகள்: ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உத்யோக் பவன் மற்றும் கள அலுவலகங்களில் இயக்கத்தை ஊக்குவிக்கும் பதாகைகள் மற்றும் நிலைப்பாடுகள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக தளங்களின் தீவிர பயன்பாடு: பரவலான விழிப்புணர்வு மற்றும் பங்கேற்புக்காக இந்த பிரச்சாரம் குறித்த தகவல்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், அதனுடன் இணைந்த மற்றும் கள அமைப்புகளுடன் இணைந்து, "சிறப்பு இயக்கம் 4.0"-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது, இந்த முயற்சியை ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக ஆக்குவதுடன், தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும் அதன் செயல்பாடுகளில் நிலுவையில் இருப்பவர்களைக் குறைப்பதற்கும் அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
***
(Release ID: 2061457)
MM/AG/KR
(Release ID: 2061537)
Visitor Counter : 50