சுரங்கங்கள் அமைச்சகம்
தூய்மையே சேவை (SHS) 2024 பிரச்சாரத்தின் கீழ் 510 நிகழ்வுகளை சுரங்க அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது
Posted On:
03 OCT 2024 10:54AM by PIB Chennai
சுரங்க அமைச்சகம், அதன் கள அமைப்புகளுடன் இணைந்து, தூய்மையே சேவை (SHS) இயக்கம் 2024 -ல் தீவிரமாகப் பங்கேற்று, 'ஒட்டுமொத்த அரசு' என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, தூய்மையை மேம்படுத்துதல், தூய்மை இலக்கு அலகுகளை (CTUs) மாற்றியமைத்தல் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் முக்கிய பங்களிப்புகளை அங்கீகரித்தல் ஆகியவற்றில், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. 510 சிடியுகளின் மாற்றம் உட்பட, மொத்தம் 51 நிகழ்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அங்கு புறக்கணிக்கப்பட்ட குப்பை மையங்கள் சுத்தம் செய்யப்பட்டு, புத்துயிர் பெற்றன. இந்த முயற்சிகள், அதன் அலுவலகங்களில் தூய்மை மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.
அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணை அமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, செயலாளர் (சுரங்கங்கள்) மற்றும் பிற அதிகாரிகள் தூய்மையே சேவை 2024 இயக்கத்தை மேம்படுத்த இந்தியா முழுவதும் உள்ள பல புவி-பாரம்பரிய மற்றும் புவி-சுற்றுலா தளங்களைப் பார்வையிட்டனர்.
"தூய்மைப்பங்குதாரர்" என்ற முன்முயற்சியின் கீழ், ஆக்கப்பூர்வமான கழிவுகளிலிருந்து கலைப் பொருட்கள் உருவாக்கப்பட்டன, இதன் விளைவாக ஜே.என்.ஏ.ஆர்.டி.டி.சி ஆல் அலுமினிய கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட தனித்துவமான பொருட்கள் உட்பட, தனித்துவமான சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. துப்புரவுப் பணியாளர்களை மேலும் ஆதரிப்பதற்காக, சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் அவர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிக்க, பிபிஇ கிட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, 2024 செப்டம்பர் 26 அன்று சாஸ்திரி பவன் மற்றும் நாக்பூரில் உள்ள ஐபிஎம் மற்றும் ஜேஎன்ஏஆர்டிடிசி கள அலுவலகங்களில், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு, சிறப்பு காசநோய் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்தது.
நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அமைச்சகம் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று முன்முயற்சியின் கீழ், மரக்கன்று நடும் இயக்கங்களை நடத்தியதுடன், மேலும் தூய்மை உறுதிமொழிகள், முழக்கம் எழுதுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் மூலம் பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவித்தது. இதுதவிர, மீட்டெடுக்கப்பட்ட 6 சுரங்கப் பகுதிகள், இந்த இயக்கத்தின் போது அழகுபடுத்தப்பட்டன, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது.
அக்டோபர் 2 அன்று, அனைத்து அமைச்சக அலுவலகங்களிலும் தூய்மை இந்தியா தின கொண்டாட்டங்களுடன், இந்த இயக்கம் நிறைவடைந்தது. சாஸ்திரி பவனில் சுரங்க அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சஞ்சய் லோஹியா மற்றும் மூத்த அதிகாரிகள் இணைந்து, உடலுழைப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தூய்மை மற்றும் பொதுச் சேவையில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இந்த பயனுள்ள முயற்சிகள் மூலம், சுரங்க அமைச்சகம் தூய்மையே சேவை 2024-ன் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைவருக்கும் தூய்மையான மற்றும் பசுமையான சூழலை வளர்ப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
***
(Release ID: 2061361)
MM/AG/KR
(Release ID: 2061480)
Visitor Counter : 65