விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

"தூய்மையே சேவை இயக்கம்-2024 ": துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் பரிசு வழங்குதல் மற்றும் பாராட்டு விழா கிருஷி பவனில் நடைபெற்றது

Posted On: 02 OCT 2024 11:59AM by PIB Chennai

2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நாடு முழுவதும் பரவியுள்ள தனது  அனைத்து துணை / இணைக்கப்பட்ட / தன்னாட்சி அமைப்புகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / கள அலுவலகங்களில்  'தூய்மைப் பழக்கம் – தூய்மைக் கலாச்சாரம்' என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்பட்ட  தூய்மையே சேவை, 2024 இயக்கத்தில்  மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை தீவிரமாகப் பங்கேற்றது.

சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து  வேலை செய்ய ஆரோக்கியமான மற்றும் சுத்தமான சூழலை துப்புரவுத் தொழிலாளர்கள் வழங்குகின்றனர். துறையின் நல்வாழ்வில் அவர்களின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அவர்களுக்கு 2024,அக்டோபர் 1அன்று  பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டதுப்புரவுத் தொழிலாளர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப்  பரிசு வழங்கும் விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, துறையின் கூடுதல் செயலாளர் திருமதி சுபா தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

---

SMB/DL



(Release ID: 2061053) Visitor Counter : 24