சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
Posted On:
30 SEP 2024 8:40PM by PIB Chennai
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் இடையே புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சமுதாயத்தில் விளிம்பு நிலை மற்றும் நலிவுற்ற பிரிவினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள துறையின் பல்வேறு சட்டங்கள், விதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த குறிப்பிடத்தக்க கூட்டாண்மையின் நோக்கமாகும்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவருமான திரு சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பட்டியல் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மூத்த குடிமக்கள், திருநங்கைகள், குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்கள், சீர்மரபினர் மற்றும் நாடோடி பழங்குடியினர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட சார்த்தி1.0 முன்முயற்சியின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தையும் இந்த நிகழ்வு கண்டது.
சார்த்தி1.0 முன்முயற்சி, நிலையான வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் 2030 செயல்திட்டத்துடன் ஒத்துப்போகிறது, குறிப்பாக வறுமையை ஒழித்தல், சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் அனைவருக்கும் அதிக சமத்துவத்தை உறுதி செய்யும் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. விழிப்புணர்வு இடைவெளியைக் குறைப்பது மற்றும் சமூக நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய சட்ட உதவிகளை வழங்குவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2060443
**************
BR/KV
(Release ID: 2060704)
Visitor Counter : 39