பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் பொறுப்பேற்றார்

Posted On: 30 SEP 2024 9:43PM by PIB Chennai

 

விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்) இன்று நடைபெற்ற விழாவில் விமானப்படை தளபதியாக ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் பொறுப்பேற்றார்.

 1984 டிசம்பர் 21 அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் இவர் பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் விமானம் ஓட்டுவதற்கு தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர்.   நிலையான இறக்கை மற்றும் ரோட்டரி இறக்கை விமானங்களில் 5000 மணிநேரத்திற்கும் அதிகமாகப் பறந்த அனுபவம் பெற்றவர்.

இவரது  பதவிக்காலங்களில் மிக் -27 ஸ்குவாட்ரனின் கமாண்டராகவும், விமான தளத்தின் விமான அதிகாரியாகவும் உள்ளார். ஒரு சோதனை பைலட்டாக, ரஷ்யாவின் மாஸ்கோவில் மிக் 29 மேம்படுத்தல் திட்ட மேலாண்மை குழுவை வழிநடத்தினார். தேஜஸ் விமான சோதனையை கவனிக்கும் தேசிய விமான சோதனை மையத்தில் திட்ட இயக்குநராகவும் (விமான சோதனை) இருந்தார். நான்கு தசாப்தங்களாக நீடித்த இவரது தொழில்முறை வாழ்க்கையில், தென்மேற்கு விமான காமாண்டிங்  தலைமையகத்தில் விமானப்  பாதுகாப்பு தளபதியாகவும், கிழக்கு விமான காமாண்டில்  மூத்த விமான பணியாளர் அதிகாரியாகவும்  பணியாற்றியுள்ளார். விமானப் படை தலைவராக பொறுப்பேற்பதற்கு முன், இவர் விமானப் படை  துணைத்தலைவராக இருந்தார்.

ஏர் சீஃப் மார்ஷல்  ஏ.பி.சிங் பரம் விஷிஷ்ட்சேவா பதக்கம், அதிவிஷ்ட்சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இந்திய விமானப்படை வீரர்களிடையே  உரையாற்றிய ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், இந்திய விமானப்படையை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பது தமக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.

முன்னாள் விமானப்படை வீரர்களின் தொலைநோக்கு பார்வைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், இந்திய விமானப் படையின் வெற்றிக்கு அவர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் ஆற்றல்மிக்க தலைமைப் பொறுப்புகளே காரணம் என்றார். தற்போதைய நிச்சயமற்ற புவிசார் அரசியல் நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு அழைப்பு விடுத்த அவர், விமானப்படை வீரர்கள் அனைவரும் இந்த மகத்தான சேவையின் மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து "புகழுடன் வானத்தைத் தொடுவதை" உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

*******

SMB/KV

 


(Release ID: 2060526) Visitor Counter : 46