பாதுகாப்பு அமைச்சகம்
இந்தோ – பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தைக்கான முன்னோட்டம்
Posted On:
30 SEP 2024 4:42PM by PIB Chennai
இந்திய கடற்படையின் வருடாந்திர உச்ச நிலை சர்வதேச மாநாட்டின் 2024-ன் பதிப்பான இந்தோ - பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை, 2024 அக்டோபர் 03, 04, 05 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும். இது சமீபத்தில் முடிவடைந்த கோவா கடல்சார் கருத்தரங்கு 2024-ஐ பின்பற்றுகிறது. இது 2024 செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோவாவில் உள்ள கடற்படை போர்க் கல்லூரியில் இந்திய கடற்படையால் நடத்தப்பட்டது.
கருத்தியல் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, கோவா கடல்சார் கருத்தரங்கு இந்திய கடற்படையின் கூட்டுறவு ஈடுபாட்டை செயல்பாட்டு மட்டத்தில் முன்வைக்க முற்படுகையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்படைகள் மற்றும் கடல்சார் முகமைகளிடையே விவாதத்திற்கான ஒரு மன்றத்தை வழங்குவதன் மூலம், இந்தோ - பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை என்பது உத்திசார்ந்த மட்டத்தில் இந்திய கடற்படையின் சர்வதேச ஈடுபாட்டின் முக்கிய வெளிப்பாடாகும்.
இந்தோ - பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தையின் முதல் இரண்டு பதிப்புகள் முறையே 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் புதுதில்லியில் நடைபெற்றன.
இந்தோ - பசிபிக் வள-புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவதால், இந்தோ - பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை 2024-ன் பதிப்பானது, இந்தோ - பசிபிக் கடல்கள் முன்முயற்சி வலையின் இரண்டு முக்கிய தூண்களின் பல பரிமாணங்களை ஆராய்ந்து விரிவுபடுத்தும்.
இந்தோ - பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை-2024, உலகளவில் புகழ்பெற்ற கல்வியியல் வல்லுநர்கள், பேச்சாளர்களின் உரைத் தொடர்கள் மூலம், வள-புவிசார் அரசியலின் பெரிய அளவிலான போக்குகளை அடையாளம் காணவும், சாதகமாக பின்பற்றக்கூடிய கொள்கை-விருப்பங்களைப் பற்றி விவாதிக்கவும் முயற்சிக்கும்.
இந்த மாபெரும் மாநாட்டின் சிறப்பம்சமாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் உரை அமையும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நமது துடிப்பான மாணவ சமூகம், ஆராய்ச்சி அறிஞர்கள், புகழ்பெற்ற குடிமக்கள், கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள், தூதரக உறுப்பினர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் பங்கேற்பு இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பான உத்வேகத்தை அளிக்கும்.
---
LKS/KPG/DL
(Release ID: 2060401)