நித்தி ஆயோக்
"இந்தியாவில் மூத்த குடிமக்கள் பராமரிப்பை வலுப்படுத்துதல்" குறித்த தேசிய பயிலரங்கு
Posted On:
30 SEP 2024 4:36PM by PIB Chennai
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) மற்றும் கேரள அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் ஆகியவற்றுடன் இணைந்து, 27 செப்டம்பர் 2024 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் "இந்தியாவில் மூத்த குடிமக்கள் பராமரிப்பை வலுப்படுத்துதல்" என்ற தேசிய பயிலரங்கிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது. மூத்த குடிமக்கள் பராமரிப்பில், தற்போதுள்ள இடைவெளிகள் மற்றும் சவால்கள் குறித்து, மாநிலங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் கருத்துக்களை வெளிக்கொணர்வதும், மாநிலங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து, அவர்களின் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.
தேசிய அளவிலான இந்த ஒருநாள் பயிலரங்கை, கேரள அரசின் உயர் கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் டாக்டர் ஆர். பிந்து தொடங்கி வைத்தார். நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் இதற்கு தலைமை வகித்தார். சாரதா முரளீதரன், கேரள அரசின் தலைமைச் செயலாளர் திருமதி சாரதா முரளிதீரன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ், ஊரக வளர்ச்சி அமைச்சகம், கேரளா மற்றும் பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், இந்திய ஊரக உணவு மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் இதர தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாநில ஆதரவு இயக்கத்தின் (எஸ்.எஸ்.எம்) ஒரு முன்முயற்சியான நித்தி ஆயோக்-மாநில பயிலரங்கு தொடரின் ஒரு பகுதியாக இந்த பயிலரங்கு நடத்தப்பட்டது.
நிறைவு அமர்வில், பயிலரங்கின் பின்னணியை அமைப்பதற்கான ஒரு சுருக்கமான விளக்கக்காட்சியை நித்தி ஆயோக் வழங்கியது, அதைத் தொடர்ந்து கேரள அரசு "மூத்த பராமரிப்புக்கான கொள்கை சீர்திருத்தங்கள்: கேரளாவில் அனுபவத்தை விவரித்தல்" என்ற தலைப்பில் விரிவான விளக்கக்காட்சி அளித்தது.
இந்த பட்டறை நான்கு அமர்வுகளாக பிரிக்கப்பட்டது, ஒரு குழு விவாதம் மற்றும் மூன்று ஊடாடும் வட்டமேசை அமர்வுகள், இது சவால்களை எதிர்கொள்வது, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தற்போதைய முயற்சிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தியாவில் ஒரு முழுமையான மூத்த குடிமக்கள் பராமரிப்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கு முன்னோக்கி செல்வதில் கவனம் செலுத்தியது.
மூத்த குடிமக்கள் பராமரிப்பை வலுப்படுத்துவது, குறிப்பாக மூத்த குடிமக்கள் பராமரிப்பின் பல்வேறு அம்சங்கள், கொள்கை கட்டமைப்புகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் முதல் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிதி பாதுகாப்பு வரை, பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், களத்தில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும், உடனடி சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாகவும் இருந்தனர்.
நித்தி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால், நிறைவு அமர்வில், மூத்த குடிமக்களுக்கான கவனிப்பு மற்றும் ஆதரவுக்கான மிகப்பெரிய பூர்த்தி செய்யப்படாத தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய தேசிய மூத்த குடிமக்கள் பராமரிப்பு திட்டத்தை உருவாக்கி, மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவில் மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கான உள்ளடக்கிய மற்றும் திறமையான சேவை வழங்கலுக்கான ஒரு பரந்த மற்றும் முழுமையான பார்வையை உருவாக்குவதே முன்னோக்கிச் செல்லும் வழியாகும்.
***
SRI/MM/AG/RR/DL
(Release ID: 2060333)
Visitor Counter : 47