தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு கொள்கை: இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஆலோசனை அறிக்கை வெளியீடு

Posted On: 30 SEP 2024 12:39PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இன்று தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு கொள்கையை உருவாக்குதல் குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அதன் 2024, ஏப்ரல் 23 தேதியிட்ட குறிப்பின் மூலம், தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளைக் கோரியது. தொழில்நுட்ப மாற்றத்தை பூர்த்தி செய்வதற்காக, எஃப்எம் கட்டம்-3 கொள்கையின் கீழ், தற்போதுள்ள சில விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம் என்று தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு கொள்கைக்கான பரிந்துரைகளை உருவாக்கும் போது கருத்தில் கொள்ளக்கூடிய சில சிக்கல்களையும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்துக்காட்டியுள்ளது.

அதன்படி, தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு கொள்கையை உருவாக்குவது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக ட்ராய் இந்த ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியுள்ளது. ஆலோசனை அறிக்கை மீதான எழுத்துப்பூர்வ கருத்துகள் 2024, அக்டோபர் 28-ம் தேதிக்குள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மாற்றுக் கருத்துகள், ஏதேனும் இருந்தால், 2024, நவம்பர் 11-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, திரு தீபக் சர்மா, ஆலோசகர் (பி&எஸ்) தொலைபேசி எண் +91-11-20907774-ல் தொடர்பு கொள்ளலாம்.

----

(Release ID  2060201)

SRI/LKS/KPG/RR


(Release ID: 2060310) Visitor Counter : 41