வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மேக் இன் இந்தியாவை மேலும் வலுப்படுத்த வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2024; நாடு முழுவதும் தடையற்ற வணிக ஒழுங்குமுறை கட்டமைப்பைக் கொண்டுவரும்
Posted On:
30 SEP 2024 12:32PM by PIB Chennai
நாடு முழுவதும் தடையற்ற வணிக ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவி மேக் இன் இந்தியா முன்முயற்சியை மேலும் வலுப்படுத்த வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2024 கொண்டுவரப்பட்டுள்ளது. இது வணிகம் செய்வதை எளிதாக்கும். தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தலைமையில், வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2024 வணிகங்கள் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறது. முந்தைய திட்டங்களின் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு, இணக்கச் சுமையைக் குறைத்தல் குற்ற நவடிக்கைகளை அகற்றுதல் போன்ற முக்கிய அரசு முயற்சிகளுடன் இது ஒத்துப்போகிறது. அதே நேரத்தில் உலக வங்கியின் வரவிருக்கும் 'தயாராக இருங்கள்' திட்டத்தின் கூறுகளையும் ஒருங்கிணைக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு, ஒழுங்குமுறை செயல்பாடுகளை நெறிப்படுத்தும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்தியாவின் வணிகச் சூழலில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஒப்புதல் நேரங்களைக் குறைத்தல், ஆன்லைன் சேவை வழங்கலை ஒருங்கிணைத்தல், தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மற்றும் பிரதமரின் விரைவு சக்தி போன்ற முன்முயற்சிகளை மேம்படுத்துவதில் வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2024 கவனம் செலுத்துகிறது. மேலும் மிகவும் வெளிப்படையான, திறமையான, மாறும் ஒழுங்குமுறை சூழலை உருவாக்க உறுதியளிக்கிறது. இந்தியாவை விரும்பத்தக்க உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்ற டிஜிட்டல் தீர்வுகளை செயல்படுத்துகிறது. தொழிலாளர், சுற்றுச்சூழல், வரிகள், நில நிர்வாகம், பயன்பாட்டு அனுமதிகள், ஆய்வு, கட்டுமானம் போன்ற முக்கியமான துறைகளை உள்ளடக்கிய வணிக சீர்திருத்த செயல் திட்டம் அதன் ஆரம்ப நோக்கத்திற்கு அப்பால் விரிவடைந்துள்ளது.
2014-2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் நாட்டின் வணிகச் சூழலை மறுவடிவமைப்பதில் ஒரு மாற்று சக்தியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2060200
***
SRI/SMB/RR
(Release ID: 2060244)
Visitor Counter : 49