வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
6-வது இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைக் கூட்டம் - வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக அமைச்சருடன் இணைந்து தலைமை வகிக்கவுள்ளார் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
29 SEP 2024 9:45AM by PIB Chennai
அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமதி ஜினா ரைமாண்டோவின் அழைப்பின் பேரில், இந்திய அரசின் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நாளை (2024 செப்டம்பர் 30) முதல் 2024 அக்டோபர் 3 வரை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
2024 அக்டோபர் 2 அன்று இந்தியா-அமெரிக்கா தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்திற்கு அமெரிக்க அமைச்சர் திருமதி ரைமண்டோவுடன் இணைந்து மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கவுள்ளார். மேலும் 2024 அக்டோபர் 3, 2024 அன்று வாஷிங்டன் டிசி-யில் நடைபெறவுள்ள 6 வது இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்று அமெரிக்க அமைச்சருடன் இணைந்து தலைமை வகிக்கவுள்ளார்.
இதில் இரு தரப்பினரும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வழிகள், வணிக, முதலீட்டு சூழலை மேம்படுத்துதல் மற்றும் இந்திய - அமெரிக்க வணிக சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை ஆழப்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிப்பார்கள்.
அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னணி அமெரிக்க - இந்திய தலைமைச் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடுவார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பரந்த வாய்ப்புகளை அப்போது எடுத்துரைப்பார்.
அமைச்சர் திரு பியூஷ் கோயலின் அமெரிக்கப் பயணம் இந்தியா - அமெரிக்கா இடையேயான வலுவான மற்றும் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும்.
*****
PLM/ KV
(Release ID: 2060052)
Visitor Counter : 43