விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை தூய்மையே சேவை 2024 இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றது

Posted On: 21 SEP 2024 1:47PM by PIB Chennai

 

வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை தூய்மையே சேவை 2024 இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதுமேலும் தூய்மை தொடர்பான செயல்பாடுகளை நாடு முழுவதும் பரவியுள்ள அனைத்து துணை/ இணை/ தன்னாட்சி அமைப்புகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ கள அலுவலகங்கள் என 600க்கும் அதிகமான இடங்களில் இத்துறை மேற்கொள்ள உள்ளது .

இதன் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குதூய்மைஎன்ற தலைப்பில் ஓவியப் போட்டிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 60-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் துறையின்  செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, கூடுதல் செயலாளர் திருமதி சுபா தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும் தூய்மையே சேவை 2024 இயக்கத்தின் நிறைவாக அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்படும்.

*****

SMB / KV

 

 


(Release ID: 2059906) Visitor Counter : 32


Read this release in: Odia , Marathi , English , Urdu , Hindi