விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும் தூய்மையே சேவை, சிறப்பு இயக்கம் 4.0 ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன
Posted On:
28 SEP 2024 1:14PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும், தூய்மையே சேவை, சிறப்பு இயக்கம் 4.0 ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தன. குடிமக்களைத் தூய்மையுடன் ஒருங்கிணைக்க உள்ளாட்சி அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டன. இதில் பல்வேறு ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள் பங்கேற்றன.
வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள சில ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்களுக்கு அருகிலுள்ள கிராமங்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், பொருத்தமான அப்புறப்படுத்தலுக்காக கழிவுகளை பிரிக்கவும் உணர்த்தப்பட்டன. இந்த முயற்சியில், உள்ளூர் சந்தையில் கழிவுகள் அதிக அளவில் சேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. உலர் மற்றும் ஈரமான கழிவு மேலாண்மை, மறுசுழற்சி நடைமுறைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இந்த நிறுவனத்தின் அதிகாரிகளால் கற்பிக்கப்பட்டது. கிராமத்தின் முக்கிய இடங்களில் தூய்மை பதாகைகள் வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. உள்ளூர் கிராம மக்களிடையே மன, உடல் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
கிராமப் பணியாளர்களுடன் பணிபுரியும் ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்களின் வல்லுநர்கள், சிறந்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் அன்றாட வாழ்க்கையில் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். வீடுகளில் சுகாதாரத்தை பராமரிப்பதற்கான நடைமுறைகள், தனிப்பட்ட தூய்மை, சமூக சூழல் பற்றிய விவாதங்கள் அமர்வுகளில் இடம்பெற்றன.மன ஆரோக்கியம் பற்றியும் அவர்கள் உரையாற்றினர். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உடல் தூய்மையைப் போலவே அழுத்தமில்லாத, சுத்தமான மனமும் முக்கியம் என்ற கருத்தை ஊக்குவித்தனர். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியான இந்த முயற்சி, கல்வி மற்றும் தொடர்பு மூலம் கிராமப்புற சமூகங்களில் நீண்டகால நடத்தை மாற்றங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
*****
SMB/KV
(Release ID: 2059822)
Visitor Counter : 38