இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2024 2:43PM by PIB Chennai
சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் மக்களை ஈடுபடுத்தவும் இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவுமான வழிமுறைகளை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சுற்றுலா அமைச்சகம் அறிமுகம் செய்யவுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்படும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளின் கருத்துக்களும் அனுபவங்களும் மதிப்பீடு செய்யப்படும். அவர்களின் சுற்றுலா அனுபவத்தையும் கருத்துகளையும் பதிவிட சுமார் 30 விநாடிகள் செலவிட்டால் போதும்.
இந்தப் பின்னூட்டம் நிகழ்நேர மற்றும் மாறும் தன்மையுடையதாக இருக்கும். இது பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து செயலூக்கமான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சகத்திற்கு உதவும். இது சுற்றுலா வளர்ச்சிக்கான தரவுகள் மற்றும் உள்ளீடுகளின் வளமான ஆதாரமாகத் திகழும்.
சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்படும் க்யூஆர் குறியீட்டை, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நிறுவுவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் சுற்றுலா அமைச்சகத்துடன் ஒத்துழைக்கின்றன. இதனால் அந்தக் கருத்துகள் சுற்றுலா கொள்கை மற்றும் உத்திகளுக்கு உள்ளீடுகள் மற்றும் தகவல்களின் நம்பகமான ஆதாரமாக மாறும்.
*****
SMB/AG/DL