சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பொருளாதார வளர்ச்சி சுற்றுலாத் துறையுடன் பின்னிப் பிணைந்துள்ளது: குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர்

Posted On: 27 SEP 2024 4:12PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (27.09.2024) மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த உலக சுற்றுலா தினக் கொண்டாட்டங்களில் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தின் கருப்பொருள் 'சுற்றுலாவும்,  அமைதியும்'  என்பதாகும்.

நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர்  திரு சுரேஷ் கோபி, சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திருமதி வித்யாவதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களின் தூதர்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூத்த அதிகாரிகள், மாநில,  யூனியன் பிரதேச அரசுகளின் சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், சுற்றுலாத் துறையில்  மிக உயர்ந்த தரத்தை அடைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளதையும், உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இவை  சுற்றுலாவில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் எடுத்துரைத்தார். பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுலாத் துறையுடனும், சுற்றுலாவுடனும் பின்னிப் பிணைந்துள்ளது என்று திரு தன்கர் கூறினார்.

--

PLM/KPG/DL



(Release ID: 2059643) Visitor Counter : 10


Read this release in: English , Hindi , Marathi