சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை புனேயில் 20-வது திவ்ய கலா மேளாவைத் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
27 SEP 2024 2:40PM by PIB Chennai
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நாளை (28.09.2024) 20-வது திவ்ய கலா மேளாவை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு நாளை தொடங்கி 2024 அக்டோபர் 6 வரை, புனே பொதுப்பணித்துறை மைதானத்தில் நடைபெறும். மத்திய அரசின் சமூக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
திவ்ய கலா மேளா என்பது இந்தியா முழுவதிலுமிருந்து மாற்றுத் திறனாளிகள், கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கைவினைத்திறன், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாகும். இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், பொம்மைகள், அணிகலன்கள் உள்ளிட்ட தங்களது பல்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.
------
PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2059605)
आगंतुक पटल : 67